உடற்பயிற்சி செய்யும்போது முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
தமிழில் ‘தடையற தாக்க', ‘என்னமோ ஏதோ', ‘ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர், சமீபத்தில் ஜிம்மில் 80 கிலோ எடையை தூக்கும் போது பலத்த காயம் அடைந்தள்ளார். இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“நான் மிகவும் முட்டாள்தனமான ஒன்றைச் செய்துவிட்டேன். என் உடல் சொல்வதை கேட்கவில்லை. ஆரம்பத்தில் லேசான வலி இருந்தது. ஆனால் நாளடைவில் அது பெரிய காயமாக மாறிவிட்டது. கடந்த ஆறு நாள்களாக நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். முழுவதுமாக குணமடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என நினைக்கிறேன். இதனால் நீங்கள் எல்லோரும் உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள். அதை மீறி எதையும் செய்யாதிர்கள். நான் மீண்டும் வலிமையுடன் வருவேன்” என்று கூறியுள்ளார்.