‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’- மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்!

‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’- மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்!

‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்’ என தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியிருப்பது அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த விஜய்யை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவர் மண்டபத்திற்கு செல்ல கொஞ்சம் தாமதமானது. மண்டபத்திற்குள் சென்றவர் மாணவர்கள் மத்தியில் அமர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கொடுத்த போட்டோவை வாங்கிக் கொண்டார். அதே போட்டோவுடன் மேடை ஏறிய விஜய் பேசியவதாவது, “இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்களில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால் இது போன்ற நிகழ்ச்சியில் பேசுவது இதுதான் முதன்முறை. பெரிய பொறுப்புணர்ச்சி வந்தது போல உணர்கிறேன்.உங்களில் என்னைக் காண்கிறேன். உங்களைப் பார்க்கும்போது என்னுடைய பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது. நான் Below averege student. படிப்பை மட்டும் யாரிடமும் இருந்தும் பிடுங்கிக்கொள்ளவே முடியாது. என்னுடைய கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு அதை நோக்கியே பயணம் செல்கிறது.

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அதில் வந்த வசனம் ரொம்ப பிடித்திருந்தது. 'நம்மகிட்ட நிலம் இருந்தா பறிச்சுக்குவாங்க.. நம்மகிட்ட காசு பணம் பிடுங்கிக்குவாங்க... ஆனால் படிப்புமட்டும் யாரும் பிடுங்க முடியாது... படிப்பு ஒன்று தான் நம் சொத்து.

நீயெல்லாம் என்னத்த படிச்ச, இப்படி அறிவுரை சொல்ல வந்துட்டன்னு சிலர் நினைக்கலாம். நானும் அப்படித்தான் படிப்பு வாசமே இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டேன்.

சாதிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பது நீண்ட கால கனவு. படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது. தனிப்பட்ட அடையாளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதீர்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலின் உண்மையை அறிய வேண்டும். இன்றைய மாணவர்களே நாளைய வாக்காளர்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம். இதனை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.

பின்னர், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதிலிமிருந்து வந்திருந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இந்த நிகழ்வுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அதில் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வாடகை மட்டும் 40 லட்ச ரூபாய் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் இந்த செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com