‘விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்;’ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா ஸ்பந்தனா
நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், ‘விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்’ என்று அவர் ட்விட் செய்துள்ளார்.
நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் முழு நேர அரசியலில் ஈடுபட்ட பின்னர் பெரும்பாலும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இந்தநிலையில், நாற்பது வயதாகும் திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், திவ்யா ஸ்பந்தனா ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.
அதேபோல், மற்றொரு பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில்,“இப்போதுதான் திவ்யா ஸ்பந்தனாவுடன் பேசினேன். அவர் ஜெனிவாவில் உள்ளார். அவர் உறக்கத்தில் இருந்தபோதுதான் நான் அழைத்தேன். அவர் இறந்துவிட்டதாக ட்வீட் செய்த பொறுப்பற்ற நபர் யாராக இருந்தாலும், அதை செய்தியாக வெளியிட்ட செய்தி நிறுவனங்களும் வெட்கப்பட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில், ‘விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்’ என பதிவிட்டு வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளை வைத்துள்ளார்.