‘பேமிலி மேன்’ சீரீஸ் இயக்குநரை கோவையில் கரம் பிடித்தார் சமந்தா!

ராஜ்- சமந்தா திருமன நிகழ்வில்
ராஜ்- சமந்தா திருமன நிகழ்வில்நன்றி: சமந்தாவின் இன்ஸ்டா பக்கம்
Published on

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என நெருங்கியவர்கள் சூழ இன்று இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் முடித்திருக்கிறார் நடிகை சமந்தா.

’தி ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி ஆலயத்தின் உள்ளே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 30 பேர் சூழ திருமணம் முடித்திருக்கிறார் நடிகை சமந்தா. திருமணத்தில் சமந்தா சிவப்பு நிற சேலை அணிந்திருந்ததாக ஹைதராபாத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

’தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் ராஜீ என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் பல விமர்சனங்களை கிளப்பியது. அந்த சமயத்தில் இருந்தே இயக்குநர் ராஜூடன் சமந்தாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. பின்பு இந்த ஜோடி மத்தியில் காதல் கிசுகிசு கிளம்பியது கடந்த 2024 ஆம் ஆண்டு வாக்கில்தான். ஜிம், பொது நிகழ்ச்சிகள், அவுட்டிங், வெளிநாடு டிரிப் என பல இடங்களில் இருவரும் ஜோடியாகவே மீடியாக்களில் சிக்கினர். அதிலும் ஒருமுறை ராஜின் தங்கையுடனும் சமந்தாவின் புகைப்படம் வெளியானது. பலமுறை சமந்தா மற்றும் ராஜ் என இவர்கள் இருவர் பற்றியும் கிசுகிசு வந்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

சமீபத்தில் ஒரு விருது விழாவில் கூட இருவரும் நெருங்கி அணைத்தபடி எடுத்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில்தான் சமந்தா- ராஜ் இருவரும் இன்று கோவை ஈஷா மையத்தில் திருமணம் முடித்திருக்கிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி ஷ்யாமலியிடம் இருந்து ராஜ் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜின் இரண்டாவது திருமண செய்தியை ஒட்டி அவரது முன்னாள் மனைவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘விரக்தியடைந்த மக்கள் அவநம்பிக்கையான செயல்களை செய்கிறார்கள்’ எனப் பகிர்ந்திருக்கிறார்.

திருமண நிகழ்வின் போது..
திருமண நிகழ்வின் போது..

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் முடித்தார் சமந்தா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி தங்களது நான்கு வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். பின்னர் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தனது நடிப்பிற்கு பிரேக் விட்டு உடல்நிலை, பிசினஸ், விளையாட்டு, படத்தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் நாகசைதன்யாவும் நடிகை சோபிதாவை சமீபத்தில் இரண்டாவது திருமணம் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரபூர்வமாக சமந்தா தன் திருமணச் செய்தியை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நமது வாழ்த்துகள்!

logo
Andhimazhai
www.andhimazhai.com