சமந்தா
சமந்தா

யாருக்கு நடுவிரல் காட்டுகிறார் சமந்தா?

Published on

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். தற்போதுசமந்தா 'சிட்டாடல்' என்ற தொடரில் நடித்துள்ளார். அந்த தொடரின் இயக்குநர் ராஜை அவர் காதலிப்பதாக வதந்தி பரவியது.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடுவிரலை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் அவரின் டி- ஷர்ட்டில் 'அமைதியின் அருங்காட்சியகம்' என்று எழுதியிருக்கிறது. அவரின் இந்த புகைப்படம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கவா? அல்லது நாகசைதன்யாவுக்கா என்று தெரியவில்லை.

சமீபத்தில், நாகசைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com