சந்தோஷ் சிவன்
சந்தோஷ் சிவன்

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்ற சந்தோஷ் சிவன்!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சந்தோஷ் சிவன். மலையாளம், தமிழ், இந்தி

இந்த நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக வழங்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, 2024 ஆம் ஆண்டிற்காக சந்தோஷ் சிவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சந்தோஷ் சிவனுக்கு வழங்கினார்.

விருதைப் பெற்ற சந்தோஷ் சிவன், கேரளத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், மலையாள சினிமாதான் அவருக்கு ஒளிப்பதிவில் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்ததாகவும், ஒளிப்பதிவுக்கு மொழியே தேவையில்லை என்றார்.

இதுவரையிலும் உலகளவில் புகழ்பெற்ற 10 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். ஆசியாவிலிருந்து இவ்விருதைப் பெறும் முதல் ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை அடைந்திருக்கிறார் சந்தோஷ் சிவன்!

logo
Andhimazhai
www.andhimazhai.com