நடிகர் செல்வராகவனின் ’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது தம்பியும் நடிகருமான தனுஷ் வெளியிட்டுள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சாணி காயிதம், சொர்க்கவாசல் , டிடி நெக்ஸ்ட் லெவல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது அடுத்த படத்திற்காக டென்னிஸ் மஞ்சுநாத்துடன் கைகோர்த்துள்ளார். இவர் ஏற்கெனவே, ட்ரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
முதல்முறையாக தனுஷை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவன்தான். தற்போது அவர் நடித்துள்ள இந்தப் பட போஸ்டரை வெளியிடும் அளவுக்கு தனுஷ் முன்னேறியுள்ளார்.