திருப்பதியில் சாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன்
திருப்பதியில் சாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விக்கி -நயன் தம்பதி, சாருக்!

ஜவான் திரைப்படம் 7ஆம் தேதி வெளியாகும் நிலையில், ஷாருக்கான், நயன்தாரா விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜவான். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நாளை மறுநாள் வெளியாகிறது.

ஜவானில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடிகர் ஷாருக்கான் பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றார். அவர் முகத்தை மறைத்தபடி கோயிலுக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்றனர். குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சாமி தரிசனம் செய்தனர். சிறிது நேரத்தில் அங்கு ரசிகர்கள் குவிந்ததால் அவர்கள் கார் ஏறி வேகமாக புறப்பட்டுச் சென்றனர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com