சிம்புவின் ‘அரசன்’ தீபாவளிக்கு வரமாட்டார் ? ஹூ இஸ் த பிளாக்‌ஷீப் ??

சிம்புவின் ‘அரசன்’ தீபாவளிக்கு வரமாட்டார் ? ஹூ இஸ் த பிளாக்‌ஷீப் ??
Published on

வெற்றிமாறன், சிம்பு கூட்டணியின் ‘அரசன்’ நிச்சயமாக தீபாவளிக்கு வந்துவிடும் என்று படக்குழுவினரால் பல சந்தர்ப்பங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படம் தீபாவளிக்கு டவுட் என்றொரு நம்பகமான செய்தி லீக் அவுட் ஆகியிருக்கிறது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் ‘அரசன்’. தான் இயக்கும் படங்களை சவ்வாக இழுத்து ரிலீஸ் செய்வதில் பெரும்பெயர் பெற்ற வெற்றிமாறன் இப்படத்துக்காக சிம்புவுடன் கைகோர்த்தபோது இண்டஸ்ட்ரிக்கே மூக்கு வியர்த்தது. படத்தைத் தயாரிப்பவர் தாணு என்பது இன்னொரு ஆச்சரியமாக இருக்க, விஜய் சேதுபதியும் என்ட்ரி கொடுத்தது அடுத்த சர்ப்ரைஸ்.

அதனால் இப்படத்தை குறிப்பிட்ட தேதிகளில் எதிர்பார்க்க முடியாது என்று யூடியூபர்கள் கதை அடித்துக்கொண்டிருந்ததால் கடுப்பான தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழு ‘சர்வ நிச்சயமாக தீபாவளிக்கு வந்துவிடுவோம்’ என்று சிம்பு தலையில் அடித்து சத்தியம் செய்தார்கள்.

ஆனால் லேட்டஸ்டாக கிடைத்திருக்கும் சில தகவல்களின்படி படம் தீபாவளிக்கு வருவது சந்தேகம் என்கிறார்கள். காரணம் கடந்த வாரம் துவங்கவேண்டிய படப்பிடிப்பு மேலும் ஒரு மாதத்துக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

உடனே மறுபடியும் சிம்பு கால்ஷீட் சொதப்புகிறாரா என்று சந்தேகம் வரவேண்டாம்.

இம்முறை தாமதத்துக்குக் காரணம் தயாரிப்பாளர் தாணுதான் என்கிறார்கள். மிஷ்கின், விஜய் சேதுபதி காம்போவில் இதே தாணு தயாரித்துள்ள ‘ட்ரெயின்’ பட வியாபாரம் மிக மந்தமாக இருப்பதால் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தாணு வெற்றிமாறன், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒருவருக்கும் சொன்னபடி முன்பணம் கூட வழங்கவில்லையாம்.

இதை ஒட்டி தம்பு சிம்பு துபாய் குறுக்குத் தெருவிலேயே தங்கிவிட, வெற்றிமாறன் தனது உதவி இயக்குநர்களுடன் அடுத்த பட கதை விவாதத்தில் பிசியாகிவிட, விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கும் படத்துக்குக் கிளம்பிவிட அரசன் அனாதையாக மாறியிருக்கிறாராம்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் காத்திருந்த சிம்பு ரசிகர்களை நினைச்சாதான் பரிதாபமா இருக்கு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com