ஜெயம் ரவி
ஜெயம் ரவி

கருப்பு சட்டையில் மாஸ் காட்டும் ஜெயம் ரவி: வீடியோ வெளியிட்ட சைரன் படக்குழு!

ஜெயம் ரவி பிறந்த நாளையொட்டி சைரன் படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் சைரன் படத்தின் சிறப்பு விடியோ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் சைரன் படத்தை அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்குகிறார். இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com