சித்தார்த் - சிவ ராஜ்குமார்
சித்தார்த் - சிவ ராஜ்குமார்

சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட சிவ ராஜ்குமார்!

கன்னட மக்கள் சார்பில் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் சிவ ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சித்தா திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக நடிகர் சித்தார்த் நேற்று பெங்களூரு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கன்னட அமைப்பினர் உள்ளே நுழைந்து, காவிரி விவகாரத்தைக் குறிப்பிட்டு தமிழ்ப் படங்களுக்கும் நடிகர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.

மேலும் கூட்டமாக வந்த பலரும் கலாட்டா செய்ததால், நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தன் வருத்தத்தைப் பதிவுசெய்தார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவ ராஜ்குமார், “சினிமா நிகழ்ச்சியிலிருந்து சித்தார்த் வெளியேற்றப்பட்டது வேதனையளிக்கிறது. அனைத்து மொழிப்படங்களையும் பார்க்கக் கூடியவர்கள் கன்னடர்கள். அவர்கள் சார்பில் சித்தார்த்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com