சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

“ஒற்றை மனிதக் கலைமகன்”: நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் - கமல்ஹாசன் வாழ்த்து!

“பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன்” என்று நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை ஒட்டி, கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒரு தலைப்பட்சமான மதச்சார்பின்மையைப் புறக்கணித்து, தனது வாழ்வின் இறுதி வரை தேசியத்தின் பக்கம் நின்ற சிம்மக் குரலோன் அவர்களது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை.”என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com