3ஆவது குழந்தைக்கு பெயர் சூட்டிய எஸ்.கே… என்ன பெயர் தெரியுமா?

தனது மூன்றாவது குழந்தையுடன் சிவகார்த்திகேயன்
தனது மூன்றாவது குழந்தையுடன் சிவகார்த்திகேயன்
Published on: 

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினர் தங்களது மூன்றாவது குழந்தையின் பெயரை எக்ஸ் தளத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் என்கிற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.

தற்போது குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்வின் விடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, மூன்றாவது குழந்தையின் பெயர் பவன் சிவகார்த்திகேயன் எனத் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அந்த காணொலியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கிடையே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com