தனது குடும்பத்தினருடன் நடிகர் சிவகார்த்திகேயன்
தனது குடும்பத்தினருடன் நடிகர் சிவகார்த்திகேயன்

3ஆவது குழந்தைக்குத் தந்தை ஆனார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் என்கிற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன்.2) மூன்றாவதாகத் தங்களுக்கு மகன் பிறந்ததாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மூன்றாவது குழந்தைக்கு தங்களின் அன்பும் ஆசியும் தாருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com