ஜப்பான் திரைப்பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

ஜப்பான் திரைப்படம்
ஜப்பான் திரைப்படம்
Published on: 

ஜப்பான், ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்துக்கு சிறப்புக்காட்சி அனுமதி வழங்கப்படுகிறது. நவம்பர் 10 முதல் 20ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், நவம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்வரை திரையிடலாம். அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும். முன்னிரவு 1.30 மணிக்குள் இறுதிக்காட்சியை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில், அனு இமானுவேல் நாயகியாக நடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம், ‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நாளை இந்தப் படம் நாளை வெளியாகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com