தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பின்னணி பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ், கார்த்திக் குமாருடனான திருமண முறிவு, பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சைப் பேச்சுகள், ஐஸ்வர்யா - தனுஷ் விவகாரத்து குறித்து என பல சர்ச்சக்குரிய விஷயங்களை போட்டுடைத்துள்ளார்.
அதில், "சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். அந்த விஷயத்தில் தனுஷ், எனது முன்னாள் கணவர் கார்த்திக் உட்பட்டோர் பிராங்க் செய்துவிட்டனர். பிராங்க் செய்ய ஏதாவது ஒரு அக்கவுண்ட் வேண்டும் என்று பேசிய சமயத்தில் கார்த்திக்தான் எனது அக்கவுண்ட்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார்.
அதேபோல் இயக்குநர் ஜவஹரின் மொபைலை வாங்கி கார்த்திக்கிற்கு கண்டபடி மெசேஜ் செய்வார் தனுஷ். அதுவும் ஒருவகையான பிராங்க் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தில் எனது பெயர் தப்பா பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக என்னை மனநிலை சரியில்லாதவர் என்று முத்திரையும் குத்தினார்கள். அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது"என்றவர், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சுசித்ரா ஆவேசமாகப் பேசிய இந்த காணொலி சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.