நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் சூர்யா!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக் கை மாயாவி, ரோலக்ஸ் ஆகிய படங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, விக்ரம் ஆகிய படங்களை இயக்கி புகழின் உச்சிக்குச் சென்றார். தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், தன் கனவுப்படமாக ‘இரும்புக் கை மாயாவி’இருக்கும் என்றார். மாநகரம் திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் ‘இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்கத் திட்டமிட்டார். ஆனால், இது சூப்பர் ஹீரோ கதை என்பதால் படத்தின் உருவாக்க சவால்களால் அதனைக் கைவிட்டார்.

தற்போது ரஜினி 171 படத்திற்காக திரைக்கதை அமைக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்கள் சந்திப்பின்போது, “விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்து வாடிவாசல் நடைபெறும். சூர்யா 43 அக்டோபரில் துவங்க உள்ளது. ரோலக்ஸ் கதை தனிப்படமாக உருவாக உள்ளது. லோகேஷ் இது குறித்து கதை கூறியுள்ளார். எனக்கு பிடித்துள்ளது. விரைவில் நடக்கும். இரும்புக்கை மாயாவி ரோலக்சுக்குப் பிறகு நடக்கும்.” என சூர்யா கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com