நடிகர் சூர்யாவின் 50ஆவது பிறந்தநாளையொட்டி ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட்ரோ படத்துக்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ள கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் வரும் கருப்பு படம் பெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று சூர்யாவின் 50ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், கருப்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அன்பறிவ் - விக்ரம் மோர் ஸ்டண்ட் காட்சிகளும் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் பட்டையைக் கிளப்புகின்றன.
ஜெய்பீம் படத்தின் வழக்கறிஞர் கெட்டப், கஜினி படத்தின் தர்பூசணி சீன் போன்ற பல மொமெண்டுகளை படத்துக்குள் கொண்டுவந்திருப்பார் போல இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.
அதேபோல், டீசரில் வரும் கற்பூரம் காட்டி கண்ணுல ஒட்டிக்கிற சாமி சாந்தமான சாமி இல்ல… மனசார வேண்டிக்கிட்டு மிளகாய் அறைச்சா உடனே நியாயம் கொடுக்கிற முரட்டு சாமி” என்பது போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.
இந்த படம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.