ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஒரு காட்சி
ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஒரு காட்சி

சர்வதேச பட விழாவில் தமிழ் திரைப்படம்!

இயக்குநர் ராம் இயக்கிய ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

தமிழில் எழுத்தப்பட்ட நாவல், சிறுகதையை தழுவி நிறையப்படங்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், நெதர்லாந்து சேர்ந்த ருட்கர் பிரெக்மன் எழுதிய ‘மனித குளம் நம்பிக்கையூட்டும் வரலாறு’ (Humankind: A Hopeful History) என்ற புத்தகத்தின் பாதிப்பிலிருந்து உருவாகியுள்ள திரைப்படம் ’ஏழு கடல் ஏழு மலை’.

கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ராம் இயக்கும் இந்த படத்தில் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரோட்டர்டாம், மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரைப்படம் திரையிடத் தேர்வாகியுள்ளது.

தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி உள்ளது.

சமீப காலமாக சில தமிழ்ப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com