ராயன் திரைப்படத்தை திரையரங்கில் ரகசியமாக பதிவு செய்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மினை கேரள போலீசார் கைது செய்தனர்.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை அடுத்த சிலமணிநேரங்களிலேயே சிலர் சட்டவிரோதமான வெளியிட்டு வந்தனர். இதில் முதன்மையானதாக செயல்பட்டு வந்தது தமிழ்ராக்கர்ஸ் எனும் இணையதளம். இந்த தளத்திற்கு எதிராக திரைத்துறையினர் பலர் புகார் அளித்துள்ளனர். ஆனால் புதிய புதிய வழிகளில் இந்த தளம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் தியேட்டரில், நடிகர் தனுஷின் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஸ்டீபன் ராஜ் புதுப்படங்களை செல்போனில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது.
புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே தியேட்டரின் இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்து ஒரு படத்திற்கு ரூ.5,000 கமிஷன் பெற்று இணையதளத்தில் ஸ்டீபன் ராஜ் பதிவேற்றம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.