வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் தோற்றம்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் தோற்றம்

ரஜினியின் 170 படம் வேட்டையன்; நேதாஜியின் புத்தகம் என்ன கதை?

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்துக்கு ‘வேட்டையன்' என பெயரிட்டுள்ளது.

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கிடையே, அவர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.அனிருத் இசையமைக்க, கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், லைகா நிறுவனம் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள டைட்டில் டீசரில், ரஜினிகாந்த் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஜான் குல்மன் எழுதிய ‘ஐரோப்பாவில் நேதாஜி’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார்.

டீசரின் கடைசியில், சிதிலமடைந்த கட்டடத்தின் நடுவே நின்று, ”குறிவச்சா இரை விழணும்” என்று ரஜினிகாந்த் பேசும் வசனம் பட்டையக் கிளப்புகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com