தர்மத்துக்கு நடிக்கவில்லை ரஜினி… அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தர்மத்துக்கு நடிக்கவில்லை ரஜினி… அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Published on

கமல் பட நிறுவனத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு ‘தர்மம்’ . ரத்தக் களரியுடன் ரஜினி நிற்கும் இதன் ஃப்ஃர்ஸ்ட் லுக் இன்று காலை சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது. பல குழப்பங்களுக்கு மத்தியில் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். ரஜினி, கமல் இருவருமே கலந்துகொண்ட சிறு பூஜை நிகழ்வுடன் இன்று படப்பிடிப்பும் துவங்கியது.

கமலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்கு இந்த ஆண்டு ரஜினி படம் நடித்துக்கொடுக்க முன் வந்தார். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பதில் கடந்த வாரம் குழப்பம் நீடித்து வந்த நிலையில் ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

சற்றுமுன்னர் இப்படத்தின் முதல் பார்வையை சமூக வலைதளங்களில் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் ‘தர்மம்னு பேர் வச்சிட்டு இவ்வளவு அதர்மமா நடந்துக்கிறீங்களே என்பது தொடங்கி படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ரஜினியின் கெட் அப் மிக செயற்கையாக இருப்பதாகவும் இனியாவது ரஜினி தனது வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்கும் பக்குவ மனநிலைக்கு வரவேண்டும் என்றும், அவரது படங்களில் ரத்தவெறி அதிகம் இருப்பதாகவும் கமெண்டுகள் குவிகின்றன.

இன்னொரு செய்தி. கமலுடனான நட்புக்காக ரஜினி சும்மா நடிக்கிறார் என்று சில மூட நம்பிக்கைகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அதில் உண்மையில்லை. ரஜினிக்கு 100 கோடி சம்பளம் என்று கமல் முடிவு செய்தபோது ‘வேண்டாம் கமல் படம் பிசினஸ் ஆனபிறகு லாபத்தை நாம ரெண்டு பங்கா பிரிச்சிக்கலாம்’ என்று துண்டு விரித்திருக்கிறாராம் ரஜினி. அது துண்டா இல்லை குண்டா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com