’ஓவர் மன உளைச்சல்… உடனே ஷூட்டிங்கை ஆரம்பிங்க’ கமலிடம் கதறிய ரஜினி

Rajini kamal
Rajini kamalRajini kamal
Published on

தமிழக அரசியலில் நடந்த தலைகீழ் மாற்றத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ரஜினி, ‘இனியும் வீட்டில் சும்மா இருந்தால் எனக்கு பைத்தியமே பிடித்துவிடும். எனவே ராஜ்கமல் தயாரிக்கவிருக்கும் எனது பட ஷூட்டிங்கை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிங்க’ என்று ஆண்டவருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதற்கு ‘அடடே ரொம்ப சந்தோஷம் ‘ என்று பதிலளித்த கமல் இரு தினங்கள் முன்பு அப்படத்திற்கான போட்டோ ஷூட்டை நடத்தி முடித்திருக்கிறார்.

கமல் நிறுவனத்துக்கு ரஜினி நடித்துத்தரும் ‘தலைவர் 173’ படம் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. முதலில் சுந்தர்.சி இயக்குநராக அறிவிக்கப்பட்டு அவர் விலகிக்கொள்ள அடுத்து ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் அவரும் சில காரணங்களால் ஒதுங்கிக்கொள்ள இப்போதைக்கு அஸ்வத் மாரிமுத்துதான் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தை துவக்கும் சமயத்தில் கமல் அறிவாலயத்தின் நெருக்கமான சகோவாக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமலாக இருந்தபோதிலும் முழு நிதி சப்போர்ட்டை கமலுக்கு வழங்க உதயநிதி தயாராக இருந்தார். ஆனால் அரசியல் காட்சிகள் மாறியதால் கமல் தனித்து இயங்க முடிவெடுத்தார். இதனால் புதிய இடங்களில் ரஜினி படத்துக்கு ஃபைனான்ஸ் வாங்கவேண்டிய நிலை. எனவே ரஜினி ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் இருந்த நிலையிலும் படத்தை உடனே துவங்க கமல் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து அரசியல் சர்ச்சைகளில் தொடர்ந்து ரஜினி பெயர் அடிபட ஆரம்பித்தது. திமுக தோல்வி அடைந்த நிலையில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினி அவர் இல்லத்தில் சென்று சந்தித்தது பெரும் சூறாவளி சர்ச்சையாக மாறியது. விஜய்க்கு தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் திமுக, அதிமுக கூட்டணி அமைய கூட்டாளியாக இருந்து எடப்பாடியை முதல்வராக்கும் முயற்சியில் ரஜினி ஈடுப்பட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த புயல் மேலும் மேலும் வலுவடைந்ததால் பத்திரிகையாளர்களை தனது இல்லத்துக்கே வரவழைத்து விளக்கம் தரவேண்டிய தர்மசங்கடமும் ரஜினிக்கு நேர்ந்தது.

ஆனால் அவரது விளக்கம் எடுபடவில்லை என்பதற்கு ஆதாரமாக இன்றுவரை, விஜய்க்கு எதிராக ரஜினி சில மூவ்களில் ஈடுபட்டார் என்பது அரசியல் விவாதங்களில் தவறாமல் இடம் பெறுகிறது. இதுவே ரஜினிக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருக்க, அவரது எரிச்சலில் எண்ணெய் ஊற்றும் விதமாக, அவரது சிஷ்யர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி துவங்கி ரஜினியின் பழைய அரசியல் ஆசைகளை மெல்ல அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறார். இன்னொரு அவரது மனைவி லதா ‘மக்கள் மேடை’ என்கிற அமைப்பைத் துவங்கி காமெடி செய்துகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மனம் வெறுத்துப்போன ரஜினி கடந்த வாரம் கமலை போனில் அழைத்து தனது மனக் கஷ்டங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார். இதிலிருந்து விடுபட ஒரே வழி , கண்காணாத லொகேஷனில், படப்பிடிப்பில் மூழ்கிவிடுவதுதான் என்று கதறியிருக்கிறார். அதற்கு ;ஸேம் ப்ளட்’ என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்ட கமல் பரபரவென களத்தில் இறங்கி ஜூலை முதல் வாரம் படப்பிடிப்பைத் தொடங்க தனது குழுவினரை முடக்கிவிட்டுள்ளார்.

இப்படி படப்பிடிப்பை துவங்க உள்ள நாளில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இரு தினங்களுக்கு முன் கமலின் இல்லத்தில் ரஜினியை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

துவக்க விழாவுக்கு முதல்வர் விஜய்யை கூப்பிடுவீங்களா பாய்ஸ் ?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com