விஜய் - ப்ரியங்கா மோகன்
விஜய் - ப்ரியங்கா மோகன்

தளபதி 68: விஜய்க்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் நடிகர்கள் தேர்வும் நடைபெறுகிறது. அதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். தமன் இசையைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com