தங்கலான்
தங்கலான்

சூனியக்காரிகள், கருஞ்சிறுத்தை… மிரட்டும் தங்கலான் ட்ரைலர்!

பா. ரஞ்சித்தின் தங்கலான் ட்ரைலர் வெளியாகி அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் விக்ரமின் ரசிகர்களையும் குஷிப்படுத்தி இருக்கிறது. பூர்வகுடி மக்களை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தும் இப்படம், வெள்ளையர் காலத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட அவர்கள் பயன்படுத்தப்படும்/ சுரண்டப்படும் வரலாற்றைத் தொட்டுச் செல்வதாக இந்த ட்ரைலர் உருவாகி இருக்கிறது.

இருண்மையான குறியீடுகளுக்கும் பஞ்சம் இல்லை. வட்டமாகச் சுற்றி அமர்ந்திருக்கும் பூர்வ குடியினரை நோக்கி கருஞ்சிறுத்தை ஒன்று மெல்லக் காலடி எடுத்துச் செல்கிற காட்சியில் தொடங்கி, உங்கள் உதவியைத் தேடி கிளமெண்ட் துரை வந்துருக்கிறாரு என்ற காட்சியில் உச்சம் பெறுகிறது இந்த குறியீடு. விக்ரமின் மண்டைக்குள் தோன்றுகிற செவ்விந்திய காஸ்ட்யூம் பெண்ணொருத்தியுடன் அவர் போராடிக்கொண்டிருக்கிறார். ஆரத்தி என்கிற சூனியக்காரியாக அவள் உருவம் கொள்ள, அவளைக் கட்டப்போவது யார் என்கிற கேள்வியைத் தாண்டி, இருளும் ஒளியுமாக நடக்கும் மோதல்.

நீரும் மலையும், கையில் ஓர் வலைத் தடி தாங்கிய பூர்வ குடியினருமாக அச்சு அசலாக  சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவாகி நிற்கிறது ரஞ்சித்தின் இந்த படைப்பு.

தங்கத்தைத் தோண்டும் பூர்வ குடியிடை தங்கமே உடலாக ஆகி மின்னும் தங்கலான் மிரட்டுகிறார்! சாவுக்குத் துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்கே வாழ்க்கை என்று விக்ரம் சொல்வது அந்த வாழ்க்கையில் நிச்சயமான நிஜம்தான்.

நடிகர் விகரமின் அந்த தோற்றம், தாடி, மெலிந்த உடல்.. அப்பப்பா.. இந்த நடிப்பு அசுரன் இன்னும் என்ன வெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ?

logo
Andhimazhai
www.andhimazhai.com