சுமார் ஒரு வருடத்துக்கு முன்பே முடிக்கப்பட்டு, ‘எப்போ ரிலீஸ்?’ என்று தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குநர் ஆகிய மூவருக்குமே கூட தெரியாத படம் மிஷ்கின், விஜய் சேதுபதி காம்போவின் ‘ட்ரெயின்’.
அப்படம் ஒருவழியாக தூசு தட்டப்பட்டு ரிலீஸுக்குத் தயாராகிவரும் நிலையில் நேற்று ஞாயிறன்று ட்ரெயினை தண்டவாளத்துக்குக் கொண்டுவரும் விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அவ்விழா அழைப்பிதழில் மணிரத்னம் துவங்கி தமிழ் சினிசினிமாவின் தொண்ணூத்திச் சொச்ச இயக்குநர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
மிஷ்கினுக்கும் படத்துக்கும் காதுகூசும் பாராட்டுகளை ஒவ்வொருவராக காதுகுத்திக்கொண்டிருக்க, ஒரு படி மேலே போன நடிகர் நாசர், ‘மிஷ்கின் தன்னுடைய ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் என்னிடம் படிக்கக் கொடுத்துவிடுவார். அடுத்த ஆறே மாதங்களில் அது அந்த ஸ்கிரிப்டில் இருக்கிறபடியே கனகச்சிதமான படமாக வந்துவிடும்’ என்று புகழ்ந்துகொண்டிருந்தார்.
அப்போது நாசரின் பேச்சைக் குறுக்கிட்ட பிரபல நடிகரும் அன்றைய நிகழ்ச்சித் தொகுப்பாளருமான யூகி சேது, ‘ஏன் மிஷ்கின் மாதிரி மணிரத்னம் அவரோட ‘தக் லைஃப்’ ஸ்கிரிப்டை உங்களுக்குப் படிக்க கொடுக்கலையா ?’ என்று மணிரத்னத்தை அப்பட்டமாக அவமானப்படுத்த அவரை அவசரமாக நெருங்கும் மிஷ்கின் யூகிசேதுவை ஏதோ ஒரு கெட்ட வார்த்தையில் திட்ட அடுத்த நொடியே அதே மைக்கில் ‘ஸாரி’ என்கிறார் யூகிசேது.
இந்த துயர சம்பவத்தின் வீடியோ துண்டுதான் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரல்.
சரி. எல்லாம் ஓ.கே. படம் எப்போதான் ரிலீஸ் ?
’கடைசிப் படம் ரிலீஸாகி ஆறு வருஷம் ஆச்சி. மக்கள் நான் ஒரு டைரக்டர்ங்குறதையே மறந்துட்டாங்க’ என்கிற மைண்ட் வாய்ஸுடன், அதை மேடையிலேயே தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்கிறார் இயக்குநர் மிஷ்கின். அதற்கு பதிலளிக்கும் தயாரிப்பாளர் ஆகஸ்ட்15 ல பண்ணிரலாம்’ என்க, உடனே குறுக்கிடும் மிஷ்கின் ‘அந்த தேதியில சூர்யா படம் வருதே சார்?” என்றவுடன் ஆகஸ்ட்ல வேற ஒரு தேதியில பண்ணிடலாம்’ என்று அப்போதைக்கு சமாளிக்கிறார்.
நல்லவேளை, ‘எந்த வருஷ ஆகஸ்ட்ல ?” என்று மிஷ்கின் கேட்கவில்லை.