ஷாருக்கான்
ஷாருக்கான்

ஜவான் திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ. 520 கோடி வசூல் செய்திருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோ நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இப்படம் உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2வது நாளில் உலகம் முழுவதும் ரூ. 240.47 கோடி வசூலானது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 3ஆம் நாள் முடிவில் ரூ.384 கோடி வசூலித்தது.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் ரூ. 44.5 கோடி அளவுக்கு முன்பதிவு வாயிலாகவே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியது. 4வது நாள் முடிவில் வசூல் ரூ.500 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், படக்குழு 4வது நாள் முடிவில் ரூ. 520.79 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. வார இறுதியில் எந்தப் படமும் இவ்வளவு வசூலிக்கவில்லையெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com