'கெணத்த காணோம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'கெணத்த காணோம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Published on

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் கெணத்த காணோம் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இதில், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்றது.

கதையம்சமுள்ள இயக்குநர் எனப் பெயரெடுத்த சுரேஷ் சங்கையா, கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2024-ல் உயிரிழந்தார்.

இறப்புக்கு முன், நடிகர் யோகி பாபுவை வைத்து ‘கெணத்த காணோம்’ என்கிற திரைப்படத்தையும் இயக்கி வந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com