வாச்சத்தி சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் ரோகிணி
வாச்சத்தி சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் ரோகிணி

Exclusive திரைப்படம் ஆகும் வாச்சாத்தி: இயக்குநர் ரோகிணி பேட்டி!

வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

நடிப்புக் கலைஞரும் இயக்குநருமான ரோகிணி இந்தப் படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

இது குறித்துப் படத்தின் இயக்குநர் ரோகிணியிடம் பேசியபோது, தகவலை உறுதிப்படுத்தினார்.

”இப்போதைக்கு இயக்கம், திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. யாத்திசை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலைஞர்கள், மற்ற குழுவினர் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.” என்று இயக்குநர் ரோகிணி கூறினார்.

“நீண்டகாலமாக வாச்சாத்தி சம்பவம் தொடர்பாக கவனித்துக் கொண்டுவருகிறேன். கடந்த ஒரு வருடமாக இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தோம். இப்போது அது இறுதியாகியிருக்கிறது.” என்றும் ரோகிணி கூறினார்.

இந்தப் படத்தில் ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com