பாடகி சின்மயி
பாடகி சின்மயி

பாடகி சின்மயி மாமனார் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5.85 லட்சம் திருட்டு!

மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, தனது மாமனாரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5.85 லட்சம் ரூபாயை யாரோ ஒருவர் திருடிவிட்டதாக பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் விவரம்:

” எனது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் என குறிப்பிட்டு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், நான் மின் கட்டணம் இன்னும் செலுத்தவில்லை என்றும், உடனடியாக மின் கட்டணம் செலுத்தவில்லையென்றால், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன், ஒரு செல்போன் எண் அனுப்பப்பட்டிருந்தது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது, எனது மின்சாரப் பயனீட்டாளர் எண், ஒரு லிங்க் அனுப்பி அதன் மூலம் 10 ரூபாய் பணம் செலுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். அப்போது, எனது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு மூலம் 10 ரூபாய் செலுத்த முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணம் செலுத்த இயலவில்லை.

இது பற்றி லிங்க் அனுப்பியவரிடம் கூறியபோது, அந்த நபர் வேறொரு கார்ட் மூலம் பணம் செலுத்துமாறு கூறினார். அவ்வாறு எனது விவரங்கள் குறித்து 1 மணி நேரம் என்னிடம் பேசினார். அப்போது, எனது வங்கி கணக்கில் இருந்த பணம் ரூ.4 லட்சத்து 98 ஆயிரம், மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு விட்டது. பணம் முழுவதும் எடுக்கப்பட்டதும் அவர் எனது அழைப்பை துண்டித்துவிட்டார். எனவே, எனது பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று சின்மயி தன் புகாரில் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com