சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மதராஸி படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், "ருக்மணி வசந்த் படத்தில் செமயாக நடித்திருக்கிறார். நான் இரண்டு படம் மட்டுமே இசை அமைத்திருந்த நிலையில், கத்தி படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் முருகதாஸ். நான் இங்கே நிற்பதற்கு அது ஒரு முக்கிய காரணம்.
எஸ். கே என்னுடைய செல்லம். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் எதிர்நீச்சல்தான். மதராசி நாங்கள் சேரும் 9ஆவது படம். அவர் மனசு சுத்தமாக இருப்பதால்தான் அவர் இந்தளவுக்கு உயர்ந்துள்ளார்.
50, 100 கோடி என்று வசூலித்தவர் இப்போது 300 கோடி வசூல் செய்யும் அளவுக்கு இருக்கிறார். மதராசி படத்தில் வேற மாதிரி எஸ். கே.- வை பார்ப்பீர்கள்.
டிரெய்லரில் ‘இது என் ஊருடா நான் நிப்பேன்னு’ சொல்வார். இது என் எஸ்.கே நான் வந்து நிற்பேன்.
நானும் எஸ்.கே-வும் சேர்த்து ஒரே நேரத்தில் கரியரை தொடங்கியதால் அது பர்சனலான உறவு.
என்றைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே-வின் வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன்.” என்று பேசினார்.