சினிமா

தான் எழுத இருக்கும் நாவலையே படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியுள்ளார்.
இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மாரிசெல்வராஜிடம் படமாக எடுக்க விரும்பும் நூல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் படமாக எடுக்க நினைக்கும் நூல், நான் எழுத நினைக்கும் நாவல் தான். அந்த கதை புத்தகமாக வந்த பிறகு, அதையே படமாக எடுக்க விரும்புகிறேன்.
மற்றவர்களின் கதைகளை, நாவல்களைப் படிக்கும் போது அது என்னையும் என்னுடைய வாழ்க்கையையும் தான் நினைவுப்படுத்துகிறது. அடுத்தவர்களின் கதைகளை காட்சிகளாக யோசிக்கும் அளவுக்கு இன்னும் நான் வரவில்லை.
பெண்களை மையப்படுத்தி படம் எடுக்க ஆர்வம் உள்ளது. அந்த கதையை நேர்மையாகவும் உண்மையாகவும் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என்றார்.