“பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்..” - நடிகர் மீது திருநங்கை பரபரப்பு புகார்!

நடிகர் நாஞ்சில்
நடிகர் நாஞ்சில்
Published on

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர், 2023 ஆம் ஆண்டு மரியா என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக விய் டிவியில் பணியாற்றி வருவதாகவும், அதில் கடந்த 5 வருடங்களாக நானும் நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி இருந்தார். ஆனால், பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக தனது வழக்கறிஞருடன் வந்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை, “நான் வில்லிவாக்கம் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் எப்போதும் வந்து செல்வார். நாங்கள் இருவரும் காதலிப்பது அவர்களுடைய குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். அவருக்கு திருமணமாவதற்கு முன்பு வரை, அவரின் குடும்பத்தினர் என்னிடம் நன்றாகத்தான் பேசி வந்தார்கள். ஆனால், நாஞ்சில் விஜயனுக்கு திருமணமானதும், என்னிடம் யாருமே பேசுவது இல்லை. என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

திருமணமான பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் இருவரும் ரிசார்ட் போய் இருந்தோம். அதன் பின் திடீரென ஒரு நாள், வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. குழந்தை இருக்கிறது. அதற்கு மேல் நாம் பழக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்படடு இருக்கிறேன்.

நான் திருநங்கை என்பதை தெரிந்துதான், என்னை காதலித்தார். ஆனால், இப்போது நான் திருநங்கை என்பதை காரணம் காட்டி ஒதுக்குவது வேதனியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து, அவர் யார் என்றே தெரியாது என்று பதிலளித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com