மஞ்சுமல் பாய்ஸ் குழுவினருடன் கமல்ஹாசன்; வெளியான சுவாரஸ்ய பின்னணி!

மஞ்சுமெல் பாய்ஸ் குழுவினருடன் கமல்ஹாசன்
மஞ்சுமெல் பாய்ஸ் குழுவினருடன் கமல்ஹாசன்
Published on

நடிகர் கமல்ஹாசன் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருடன் உரையாடிய விடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த வாரம் வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

இதற்கிடையில், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து தன் வாழ்த்துகளைப் பகிர்ந்ததுடன் குணா படத்தை இயக்கிய அனுபவத்தையும் கூறினார். அந்த விடியோவை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், “குணா படத்தை எடுத்த குகைகள் மிகவும் ஆபத்தானவை. நானும் அங்கிருந்து குரங்குகளின் மண்டை ஓட்டை எடுத்திருக்கிறேன். ஹேராம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட குரங்கு மண்டை ஓடு குணா குகையிலிருந்து எடுத்ததுதான். குகை உள்ளே விழும் குரங்கு குட்டிகள் வெளியே வரமுடியாமல் அங்கேயே உயிரிழந்துவிடும். மிக ஆபத்தன இடம். கண்மணி அன்போடு காதலன் பாடல் எனக்கும் இளையராஜாவுக்கும் இடையேயான காதல் கடிதம்தான்.” எனக் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com