எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ திரைப்படத்தின் பெயர் ‘ரயில்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் அறியப்பட்டவர் பாஸ்கர் சக்தி. இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்கன்’. இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்துள்ளது. வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, அதில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சமூக ஊடகத்தில் விவாதத்தைக் கிளப்பியது.
இதற்கிடையே படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு அனுமதி மறுத்தால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வடக்கன் படத்தின் பெயர் ரயில் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.