துப்பாக்கியுடன் பாடலாசிரியர் வைரமுத்து
துப்பாக்கியுடன் பாடலாசிரியர் வைரமுத்து

துப்பாக்கி தூக்கிய கவிஞர்!

“தோழன் செய்யாததை துப்பாக்கிச் செய்யும்” என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் எழுதிய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்:

“நான் ஏந்தியிருக்கும்

எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி

ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது

மற்றும் கடந்தது

எடை குறைந்த

இயக்க எளிதான

துல்லியத் துப்பாக்கி இது

சுவிட்சர்லாந்து

பள்ளிக் கல்வியில்

இது வீரப் பயிற்சிக்கு

வினைப்படுகிறது;

ராணுவ சேவைக்கு

விதையிடுகிறது

இந்தப் பயிற்சி

தன்னம்பிக்கை ஊட்டித்

தன்னெழுச்சி தருவதாக

நண்பர் கல்லாறு சதீஷின் மகள்

இனிஷா தெரிவித்தார்

தோட்டாத் தூணியை நிரப்புதல்

நெம்புதல்

விசை முடுக்கல்

சுடுகுறி பார்த்தல்

சுடல் என்பன

இதன் படிநிலைகள்

விருப்பமுள்ளவர்கள்

பயிற்சிபெறக்

கல்வித் திட்டங்கள்

கைதட்டி வரவேற்க வேண்டும்

தோழன் செய்யாததைத்

துப்பாக்கி செய்யும்

எனக்கு இந்தப் பயிற்சி

இல்லையே என்று - நான்

குறைமனிதனாய்க்

குமுறுகிறேன்.” என்று வைரைமுத்து பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com