விஜய்யின் 69ஆவது படத்தை இயக்கும் வெற்றிமாறன்?

விஜய்யின் 69ஆவது படத்தை இயக்கும் வெற்றிமாறன்?

விஜய்யின் 69ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்கிற தன் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கோட், இனிமேல் நடிக்கவிருக்கும் விஜய் - 69 படங்களுடன் சினிமாவைவிட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அறிவித்துள்ளார்.

விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், விஜய்யின் கடைசிப் படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் தலைவராக முதல் படம் என்பதால், இப்படம் நிச்சயம் அரசியலை மையமாக வைத்தே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த டி.வி.வி. நிறுவனம் விஜய்யின் 69ஆவது படத்தைத் தயாரிப்பதாகவும் அதை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் புதிதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையொட்டி, எக்ஸ் வலைதளத்தில் #Vetrimaaran என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com