விடாமுயற்சி அஜித்
விடாமுயற்சி அஜித்

விடாமுயற்சியில் அஜித் கேரக்டர்...மேலாளர் கொடுத்த அப்டேட்!

அஜித் – த்ரிஷா கணவன் மனைவியாக நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்படப் பலர் நடிக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதை அடுத்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கியது.

இந்தநிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் அஜித் கையில் ஒரு டிராவல் பேக் உடன் நடந்து வருகிறார். இந்த போஸ்டரை லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில், “அஜித் இந்த படத்தில் பாசமுள்ள கணவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஜித்துடன் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடிக்கும் கட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது. ஜூலை 2 அல்லது 3இல் த்ரிஷா படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அவரின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முடியலாம். 

அதன் பிறகு, படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பையில் நடைபெற உள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு வானிலை காரணமாக ஐந்து அல்லது ஆறு மணி நேரம்தான் நடந்தது. தற்போது 14லிருந்து 15 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.” என்றார் சுரேஷ் சந்திரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com