அருண் விஜய்
அருண் விஜய்

விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்! – அருண் விஜய் பேட்டி

"நல்லவர்கள், புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அந்த வகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான்" என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் அருண்விஜய் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன நிம்மதியும், தெளிவும் திருவண்ணாமலை அண்ணாமலையாரைப் பார்க்கும் போது கிடைக்கும். இங்குவர வேறுஎந்த காரணமும் கிடையாது. எனக்கு தோன்றும் போது இங்கு வருவது வழக்கம். நேற்று இரவு கிரிவலம் சுற்றி வந்தேன். இங்கு வந்து செல்வதால் எனக்கு தெளிவும், அடுத்தடுத்த படங்களும் கிடைக்கும்.

என்னுடைய அடுத்தடுத்த படங்கள் வெளியாகவுள்ளன. மீண்டும் திருவண்ணாமலை வர வேண்டி இருக்கு. பாலா சாரின் வணங்கான் படத்தின் படப்பிடிப்பிற்காக என்றார்.

இளம் தலைமுறை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேளவிக்கு பதிலளித்த அருண்விஜய், இன்றைய இளம் தலைமுறைக்கு பக்தி இருக்கனும். இறைவன் மீது பயம் இருக்க வேண்டும். தெளிவான முடிவெடுக்க அது உதவியாக இருக்கும்.

திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். மக்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்.

அரசியலுக்கு புதிய நபர்கள் வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்தவகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நல்ல விஷயம் தான். அவர் வரும் போது நாம் அனைவரும் வரவேற்போம்.

நடிப்பு பணிகள் உள்ளதால் அரசியலுக்கு இப்போதைக்கு வரும் எண்ணம் இல்லை. நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. நல்லவர்கள், பெரியவர்கள் இருக்கிறார்கள் அவர்களை முன்னிறுத்தி நாங்கள் பணி செய்வோம். நான் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகன் என்பதால் ’ஜெயிலர்’ படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com