விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

சொன்னதைச் செய்த விஜய் தேவரகொண்டா: நூறு குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்!

குஷி திரைப்படத்துக்காக வழங்கிய சம்பளத்திலிருந்து ரூ.1 கோடியை, நூறு குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'குஷி'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை, நூறு குடும்பங்களுக்கு பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஹைதராபாத்தில் இன்று நூறு 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் விஜய் தேவரகொண்டா வயங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com