ப்ளு சட்டைமாறன், விஜய்
ப்ளு சட்டைமாறன், விஜய்

விஜய் களப்பணி: ப்ளு சட்டைமாறன் போட்ட லிஸ்ட்!

அரசியலுக்கு எப்போது வருவேன் என்று சொல்லாமல், விஜய் பம்முவதாக ப்ளு சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் இன்று காலையில் கூறியிருந்தார். அதற்கு சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:

* ஆடியோ லாஞ்ச், சக்ஸஸ் மீட்டில் குட்டிக்கதை சொல்வது, கப்பு முக்கியம் என ஈயம் பூசுதல்‌.

* அரசியலுக்கு எப்போது வருவேன் என்று சொல்லாமல் பம்முதல்.

* மணிப்பூர், வேங்கைவயல், விலைவாசி ஏற்றம், ப்ளாக் டிக்கட் என எதுபற்றியும் பேசாமல் இருத்தல்.

* தியேட்டரை நாசம் செய்யும் ரசிகர்களை கண்டிக்காமல் இருத்தல்.

* தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க நேரடியாக போகாமல், மன்றத்தினரை அனுப்புதல்.

* கட்சி ஆரம்பிப்பது பற்றி இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட வைக்காமல் பதுங்கி இருத்தல். இதுதான் கமாண்டரின் களப்பணிகள்.” என்று ப்ளு சட்டைமாறன் விமர்சித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com