விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அரசன் படத்தில் விஜய் சேதுபதி… படக்குழு அறிவிப்பு!

Published on

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகவுள்ளது.

இதில், நடிகர் சிம்பரசன் நாயகனாகவும் வடசென்னையில் நடித்தவர்களில் சிலரும் நடிக்கவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி படத்தில் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி புகைப்படம் இடம்பெற்ற அறிவிப்பு போஸ்டரை வெளியிட்ட அவர், ”மனிதம் இணைகிறது, மகத்துவம் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்புவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com