விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது விஜயின் கோட் GOAT!

விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது விஜயின் கோட் GOAT!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் என பலர் நடிக்கின்றனர். வரும் 14 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது, மாஸ்கோவில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

இன்று காலை ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, கோட் படத்தின் அப்டேட் இன்று மதியம் 1.05 மணிக்கு வெளியாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் ‘எங்க தளபதிக்கு விசில் போடு’ என்ற ஹேஷ்டேகுடன், கோட் GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது என்ற போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த விஜய் ரசிகர்கள் #EngaThalapathykuWhistlePodu என்ற ஹேஷ் டேக் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com