நடிகர் ஹரீஸ் பேரடி
நடிகர் ஹரீஸ் பேரடி

வெயிட்டர் டூ ஆக்டர்! – நடிகர் ஹரீஸ் பேரடி

மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த வில்லன் நடிகர் ஹரீஷ் பேரடியுடன் எழுத்தாளர் ஷாஜி நடத்திய நேர்காணல்:

“வங்கி ஊழியரான என்னுடைய அப்பா, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். எனக்கு 25 வயது இருக்கும்போது இறந்துவிட்டார். நான் நாடகம் பண்ணுவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவர்தான் என் நாடகத்தைப் பார்க்க முதலில் வருவார். மற்றவர்களிடம் எல்லாம் என் நாடகத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவார். ஆனால், அதை என்னிடம் சொல்லமாட்டார்.

நாடகம் இல்லாத நேரத்தில் திருமணத்துக்காக ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றில் வேலை பார்த்தேன். எழுநூறு ரூபாய்தான் சம்பளம் என்றாலும் நூறு ரூபாய் டிப்ஸ் கிடைக்கும். இருந்தாலும், நான் பார்த்த வேலை என் உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. பின்னர் குடோன் மேனேஜர் வேலைக்கு சென்றேன். சம்பளம் ஏறக்குறைய முன்னர் வாங்கிய அதே சம்பளம்தான். என்னுடைய திருமணத்துக்காக நண்பர் ஒருவரிடம் நூறு ரூபாய்க் கடன் வாங்கித்தான் திருமணத்தை பதிவு செய்தேன். எங்களைப் பார்க்க வந்த நண்பர்களும் உறவினர்களும் நூறு ஐந்நூறு என பணம் கொடுத்தார்கள். அதன் மூலம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை வைத்துத்தான் என் திருமண வாழ்க்கையைத் தொடங்கினேன்.” என்று ஹரீஸ் பேரடி கூறுகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com