தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி
தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி

“நாங்கள் உங்களுடன் இருப்போம்:” விஜய் ஆண்டனிக்கு ஆறுதல்!

“நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்” என்று நடிகர் விஜய் ஆண்டனிக்கு இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் `ரத்தம்'.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தனது இளைய மகள் லாராவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விஜர் ஆண்டனி பேசியதாவது, “அமுதன் என் நண்பன். அவருடைய அப்பா எனக்கு மியூசிக் சொல்லிக்கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டார். நான் மியூசிக் கற்றுக் கொள்ளாமலே மியூசிக் பண்ணேன் என்று அவருக்கு தெரியும். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அவர் எனக்கு உதவிகள் செய்தார். அமுதன் கூட ரொம்ப நாள்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது இப்போது கைகூடி இருக்கிறது.

அவரை ஒரு காமெடி பட இயக்குநராகத்தான் உங்களுக்குத் தெரியும். அதைத் தாண்டி அவருடைய வேறொரு பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. நிச்சயம் இப்படம் வெற்றிப் படமாக அமையும். படத்தில் பணியாற்றிய படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கூடிய சீக்கிரமே இன்னொரு படம் பண்ணுவோம் அமுதன்" என்று பேசினார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் சி.எஸ்.அமுதன், "என்னால் சீரியஸா படம் பண்ண முடியுமா என்கிற கேள்வி என் மீது எப்போதும் இருக்கும். அதற்கான முயற்சிதான் இந்த 'ரத்தம்' படம். எங்க அப்பா இறந்த போது, சினிமா துறையிலிருந்து எங்க வீட்டிற்கு வந்தவர் விஜய் ஆண்டனிதான். அப்போது அவர் என்னிடம் 'நாங்கள் எப்போதும் உன்னுடன் இருப்போம் என்றார். அன்று அவர் எனக்குச் சொன்னதைத்தான் இன்று நான் அவருக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். 'நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் சார்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com