நாங்கள் பிரிகிறோம் - ஜி.வி. பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு!
திருமண உறவிலிருந்து பிரிவதாக ஜி.வி.பிரகாசும் சைந்தவியும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.
தமிழ்த் திரைப்பட முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம்வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். பள்ளிக் காலத்திலிருந்து பின்னணிப் பாடகி சைந்தவியைக் காதலித்து 2013இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
பத்து ஆண்டுகளாக இவர்களின் வாழ்க்கை சுமுகமாகச் சென்றநிலையில், கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில நாள்களாக தகவல் வந்தது. இந்நிலையில் நாங்கள் பிரிகிறோம் என பிரகாசும் சைந்தவியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ”பல கட்ட யோசனைக்கு அடுத்து 11 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு நாங்கள் மனம் ஒத்து பிரிய முடிவெடுத்துள்ளோம். எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் எங்களது மன அமைதிக்காகவும் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம். இந்த இக்கட்டான சூழலில் எங்களின் தனிப்பட்ட இந்த முடிவைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். நாங்கள் இருவரும் இதை ஒரு நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம்.” என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.