வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு

கோட் படத்தின் 2ஆவது பாடல் எப்போது?– வெங்கட் பிரபு பதில்

கோட் படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உட்பட்டோர் நடிக்கின்றனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் இதன் முதல் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும்விதமாக, கேள்வி பதில் பகுதியில் ரசிகர் ஒருவர், கோட் படத்தின் 2ஆவது பாடல் எப்போது எனக் கேட்டதற்கு, “ஜூன்” எனப் பதிலளித்துள்ளார் வெங்கட் பிரபு.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com