வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு முகத்தில் குத்து...தாக்கியது யார்?

பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் ஒருவர் தன்னை கொடூரமாக தாக்கியதாக வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பிக்பாஸில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது. அதற்கு காரணம் ஜோவிகா- மாயா குழுவினரே என பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுதவிர தனியார் ஊடகங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பதிவில், “நள்ளிரவு 1 மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா’ என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாக வனிதா அப்பதிவில் கூறியுள்ளார். மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரதீப்புக்கு எதிராக தனது கருத்துகளை வனிதா சமூக ஊடகங்களில் முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com