“ஜனநாயகனை ஏன் ஜன.10இல் வெளியிடக்கூடாது?'' - உயர்நீதிமன்றம் கேள்வி!

ஜன நாயகன் திரைப்படம்
ஜன நாயகன் திரைப்படம்
Published on

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜன நாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தணிக்கைச் சான்று கிடைப்பதில் தொடர் தாமதம் நிலவுகிறது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று காலை அவசர வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, ”ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கேட்டு மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தெரிவித்து சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.” என்று படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து, மத உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டை ஜன. 9ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்கு ஏன் ஒத்திவைக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது. பின்னர் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

இதன்காரணமாக இன்னும் ஜன நாயகன் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com