
நடிகை மிருணாள் தாக்கூர் தன் திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்கூர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.
அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் பிப். 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு சந்தேகங்களையும் கிளப்பியது.
இந்த நிலையில், கலாட்டா ப்ளஸ் யூ டியூபுக்கு மிருணாள் தாக்கூர் பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், அவரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிருணாள், “எனக்கு பிப். 14 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. அதை நானே ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். உண்மையில், பிப். 14 அன்று பலருக்கும் ஏப். 1 ஆக இருக்கும். ஏனெனில் ஏப்ரல் மாதம் தான் முட்டாள்கள் மாதம். இதனை யார் ஆரம்பித்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனுஷ் - மிருணாள் திருமண தகவல் முற்றிலும் வதந்தி என்றே தெரிய வந்துள்ளது.